தொடக்க நேரம் :  
திங்கள் - வெள்ளி : 9:00 – 18:00 Uhr

தனிப்பட்ட வாடிக்கையாளர்

alt
alt

எமது நிறுவனம் தனியார் வாடிக்கையாளருக்கு ஏற்ற சிறந்த நிதி வழிகாட்டலை அனுபவமும் திறமையும் வாய்ந்த நிறுவன வல்லுநர்களால் வழங்குகின்றது. உங்கள் நீண்ட கால கனவுகளை நிஜமாக்கிக் கொள்வதற்கான உரிய வழிமுறைகளையும் தொடர்பு கொண்டு பெற்றுப் பயன்பெறுங்கள்.

சொத்து காப்பீடு

பொருள் சொத்துக்களுக்கு கூடுதலாக, சொத்துக் காப்பீடு கூடுதல் செலவுகள் மற்றும் வணிக குறுக்கீடு போன்ற சொத்து சேதத்தின் விளைவுகளையும் உள்ளடக்கியது.

? வயதுவந்தோருக்கான, இயலாமைக் காப்பீடுத் திட்டம்

அரசு விதிகள், முதுமை மற்றும் இயலாமைக்கான காப்பீடு, ஓய்வூதியத் திட்டங்களை சரிவர நிர்வகிக்கவும், புதிதாக இணைக்கவும், இணைப்பிலுள்ளவர்களுக்கு மேலதிக சேவையைப் பெறவும், உங்கள் தேவைகளுக்கு தகுந்தவாறு எமது தொழில்வல்லுநர்களால் ஆலோசனை வழங்கப்படும்

? வீட்டுக்கடன்

உங்கள் கனவு இல்லத்தை நிஜமாக்கிக் கொள்ள ஏதுவாக தகுதியான வீட்டுக்கடன் பெறுவதற்குரிய வழிகாட்டல்கள் வழங்கப்படும்.

? தொழில் ஓய்வுதியம்

உங்கள் வெற்றிகரமான வாழ்க்கைக்கு முன்னேற்பாடாக ஓய்வூதியத்தை சரிவர நிர்வகித்துப் பெற்றுக்கொள்ளவும், நீங்கள் அறியாமல் வெவ்வேறாகவுள்ள உங்கள் ஓய்வூதியப்பணத்தை ஒருங்கிணைத்துப் பெற்றுக் கொடுக்க ஆலோசகர்கள் தயாராகவுள்ளனர்.

? தனிநபர் காப்புறுதிகள்

அனைவருக்குமான முறையான ஒழுங்கமைக்கப்பட்ட, உடமைகளுக்கான பாதுகாப்பிற்கும், இழப்பீடுகளுக்கானதுமான காப்புறுதிகள் நிதிஆலோசகர்களால் வழங்கப்படும்.

ஒதுக்கீடு மற்றும் ஆயுள் காப்பீடு

உங்கள் ஆரோக்கியம் உங்களுக்கு மிகவும் மதிப்புமிக்க சொத்து. இது குறிப்பாக அச்சுறுத்தப்படும்போது நீங்கள் இதை உணர்கிறீர்கள். இது போன்ற சூழ்நிலையில், உங்கள் நிதி பாதுகாப்பு பற்றி நீங்கள் கவலைப்பட தேவையில்லை. எங்கள் தொழில் கூட்டாளிகளுடன் சேர்ந்து, நாங்கள் உங்களைப் பாதுகாத்து, உங்களுக்கு சிறந்த கவனிப்பை வழங்குவதை உறுதிசெய்கிறோம்.

? வருமானவரி

உங்கள் வருவாய்க்குரிய வரியை நேர்த்தியாக வடிவமைத்து முறைப்படி வருமானவரி விண்ணப்பப்படிவம் நிரப்பவும், எவ்விதம் சட்டரீதிக்குட்பட்ட குறைந்த கட்டணத்தை வரியாக செலுத்தலாம் எனவும் சிறந்த ஆலோசனைகளையும் பெற்று வாழ்க்கை செலவை சரிவர நிர்வகித்துக் கொள்ளுங்கள்.

? முதலீடு சேமிப்புத்திட்டம்

உங்கள் சேமிப்பிற்கான கூடுதல் வட்டியினைப் பெறுவதற்கான வழிமுறைகளையும் சேமிப்பினை உரியமுறையில் பாதுகாப்பதற்கான முறைகளும் சிறந்த ஆலோசகர்களால் வழங்கப்படும்

? கடன்கள்

அதிகப்படியான தேவைகளை சீர்செய்வதற்கான மாதவருவாய்க்குட்பட்ட வங்கிக்கடன்கள் நிதிவல்லுநரின் வழிகாட்டலில் பெற்றுக்கொடுக்கப்படும்.